இனிமேல் தட்கல் டிக்கெட் ஈஸியா கிடைக்குமா? ஏஜென்ட்டுகளுக்கு ஆப்பு வைத்த ரயில்வேத்துறை!



indian railways blocks illegal software for booking ticket

இந்தியாவில் பேருந்து பயணத்தை விட மக்கள் அதிகளவில் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள், அதற்க்கு காரணம் விரைவு மற்றும் சேப்டியாக மற்றும் சொகுசாக செல்லலாம் என்பதே காரணம். இதனால் தான் வெளியூர் செல்லும் மக்கள் அதிகளவில் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஆனால் ரயில் பயணம் என்னதான் சுகமாக இருந்தாலும், அதற்கு டிக்கெட் எடுப்பது மிகவும் கடினமான செயலாகத்தான் உள்ளது.

ரயில் பயணத்திற்கு முந்தைய நாள் தட்கல் டிக்கெட் எடுப்பது என்பது மிகவும் சாமர்த்தியமான செயல். தட்கல் டிக்கெட் கிடைத்துவிட்டால் ஏதோ சாதித்தது போன்ற உணர்வு தோன்றும். இந்த தட்கல் டிக்கெட்டுகளை பிளாக் செய்துவைக்கும் பல முக்கியச் சட்ட விரோத மென்பொருள்களை கண்டறிந்துள்ளது இந்திய ரயில்வே அமைப்பு.

இந்தநிலையில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய மென்பொருளைப் பயன்படுத்தும் முகவர்கள்(AGENT) மீது ரயில்வே கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தநிலையில், இந்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அவரது ட்விட்டர் பதிவில், "ஒரு முகவர் ஒரு பயணியை அணுகி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முன்வந்தால், பயணிகள் 138 என்ற புகார் எண்ணைப் பயன்படுத்தி முகவருக்கு எதிராக புகார் செய்யுமாறும், அல்லது புகார் செய்ய கடிதம் எழுத வேண்டும் என தெரிவித்துள்ளார்.