மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஃபுட் பாய்சன்.. மன அழுத்தம்.. இறுதி ஊர்வலத்தில் மனைவியின் செயலால் சந்தேகமடைந்த குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி...
புதுடெல்லியை சேர்ந்தவர் கிஷன் தியகி - பிரியங்கா தம்பதியினர். 50 வயதான கிஷன் தியகியை கடந்த 18 ஆம் தேதி திடீரென மயக்கமானதை அடுத்து அவரை பிரியங்கா மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
உடனே பிரியங்கா அங்கிருந்த உறவினர்களிடம் கிஷன் தியகிக்கு ஃபுட் பாய்சன் என்று கூறியுள்ளார். ஆனால் அங்கிருந்த மருத்துவர்கள் கழுத்தில் காயம் இருப்பதாக கூறியதை அடுத்து கிஷன் மன அழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி கிஷனின் இறுதி ஊர்வலத்திலும் பிரியங்கா அழாமல், எப்போது போல் இயல்பாகவே இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் பிரியங்காவிடம் கிடுக்கு பிடி விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
அதாவது கிஷன் தியகி, பிரியங்காவை விட 20 வயது முதியவர் என்பது தெரியாமல் திருமணம் செய்து வைத்ததாகவும், திருமணத்திற்கு பிறகு தான் உண்மை தெரியவந்ததை அதிர்ச்சியடைந்த பிரியங்கா அதன்பின் தனது சகோதரின் நண்பரான பர்மா மற்றும் அவரது நண்பரான கரண் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும் பிரியங்கா தனது கணவரிடம் கரணை உறவினர் என கூறி வீட்டில் தங்க வைத்துள்ளார். இந்த சூழ்நிலையில் தான் மூன்று பேரும் சேர்ந்து கிஷன் தியகியை கொலை செய்ததாகவும் ஒப்பு கொண்டுள்ளார் பிரியங்கா. அதனையடுத்து போலீசார் அந்த மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.