மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆகாயத்திலும் பாலியல் தொல்லையா? விமானி மீது பணிப்பெண் பரபரப்பு புகார்.!
இந்தியாவில் செயல்பட்டு கொண்டிருக்கும் விமான நிறுவனங்களில் குறைந்த கட்டணத்தில் வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவையை வழங்கிக் கொண்டிருக்கும் நிறுவனம் இண்டிகோ. இந்த நிறுவனத்தின் விமானம் ஒன்று வழக்கம்போல் பெங்களூருவில் இருந்து அமிர்தசரஸ், ஸ்ரீநகர் வழியாக டெல்லிக்கு கடந்த 16ஆம் தேதி சென்றுள்ளது.
அப்போது விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போது விமானத்தை இயக்கிக்கொண்டிருந்த விமானி தனக்கு சுடுதண்ணீர் வேண்டுமென்று பணிப்பெண்ணிடம் கேட்டதால் அவர் காப்பி கொண்டு சென்றுள்ளார். அப்போது துணை விமானி கழிவறைக்கு சென்றுள்ளார்.
பணிப்பெண் விமானி அருகில் சென்றபோது கையில் செல்போன் வைத்திருந்த அவர் செல்பி எடுத்துக் கொள்ளலாம் என்று கூறி கழிவறைக்கு சென்ற விமானி திரும்புவதற்குள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். விமானம் டெல்லியில் தரை இறங்கிய பிறகும் பணிப்பெண்ணை சந்தித்த விமானி செல்போன் நம்பரை கேட்டவாறு அவரை கட்டி அணைக்க முயற்சி செய்துள்ளார்.
இதுகுறித்து சக பணிப்பெண்களிடம் தெரிவித்த அவர் மேலும், இது தொடர்பாக இண்டிகோ நிறுவனம் மற்றும் டெல்லி காவல் துறையிடம் புகார் ஒன்றையும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.