#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சர்வதேச விமான போக்குவரத்து ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கும்..! மத்திய அமைச்சர் தகவல்..!
ஆகஸ்ட் மாதம் முதல் சர்வதேச விமான போக்குவரத்தை தொடங்க வாய்ப்பு இருப்பதாக விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தியாவிலும் நான்கு கட்டமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு வரும் மே 31 னுடன் முடிவடைகிறது. ஊரடங்கு காரணமாக சர்வதேச விமான போக்குவரத்துக்கு உட்பட அனைத்துவிதமான போக்குவரத்துகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் நாளை முதல் இந்தியாவில் படிப்படியாக உள்நாட்டு விமான சேவை தொடங்கப்படும் என விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஏற்கனவே அறிவித்திருந்தார். சர்வதேச விமான சேவை தொடங்குவது குறித்து பேசிய அவர், அதற்கான சரியான தேதியை தற்போது அறிவிக்க முடியாது என கூறியுள்ளார்.
ஆனால், கட்டாயம் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்திற்குள் சர்வதேச விமான சேவை தொடங்க அதிக வாய்ப்பு உள்ளதாக அவர் கூறியுள்ளார்.