மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தென்னிந்தியாவை சுற்றி பார்க்க வேண்டுமா? IRCTC-ன் புதிய சலுகை திட்டம்!
தென்னிந்தியாவை சுற்றிப் பார்ப்பவர்களுக்கு புத்தாண்டு சிறப்பு சலுகையாக ஐஆர்சிடிசி புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்திய ரயில்வேயின் ஒரு அங்கமான ஐஆர்சிடிசி வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது புதிய புதிய சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் புத்தாண்டை கொண்டாடும் வாடிக்கையாளர்களுக்கு வசதியாக தென்னிந்தியாவை சுற்றிப்பார்க்கும் புதிய திட்டத்தை ஐஆர்சிடிசி அறிமுகம் செய்துள்ளது.
இந்த திட்டத்திற்கு 'தென்னிந்திய ஆன்மீக சுற்றுலா' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் மொத்தம் ஏழு பகல்கள் ஆறு இரவுகள் ஒருவர் தென்னிந்தியாவை சுற்றிவரலாம். இந்த சுற்றுப்பயணத்தில் பத்மநாத சுவாமி கோவில், விவேகானந்தர் பாறை, ராமநாதசுவாமி கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில், பாலாஜி கோவில் மற்றும் காளகஸ்தி போன்ற புண்ணிய ஸ்தலங்களை உள்ளடக்கியுள்ளது.
மேலும் இந்த சுற்றுப்பயணத்தில் சென்னை, திருவனந்தபுரம், கன்னியாகுமரி, ராமேஸ்வரம், மதுரை மற்றும் திருப்பதி ஆகிய இடங்களில் உள்ள பல்வேறு புண்ணியத் தலங்களை சுற்றிவர வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த சுற்றுப்பயணம் ஆனது மார்ச் 1, 12, 19 மற்றும் 24 ஆகிய தேதிகளில் தொடங்குகின்றது. இந்த சுற்றுப் பயணத்திற்கு ஒரு நபருக்கு 30,570 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த சுற்றுப் பயணம் முழுவதும் விமானம் மூலம் பல்வேறு இடங்களை இணைக்க ஐஆர்சிடிசி முடிவு செய்துள்ளது.