மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அச்சச்சோ.. இந்த ஆப் -ஐ மட்டும் டவுன்லோட் பண்ணாதீங்க.. மோசடி நபர்கள் கைவரிசை; இரயில்வே அமைச்சகம் எச்சரிக்கை.!
மத்திய அரசின் பிரதான துறைகளில் ஒன்று ரயில்வே துறை. லட்சக்கணக்கான பணியாளர்களை வைத்து இந்தியா முழுவதும் பயணிகளுக்கான ரயில் போக்குவரத்தை வழங்கிவரும் இதன் மூலமாக இந்திய அரசுக்கு வருமானம் அதிக அளவில் கிடைக்கிறது.
ரயில்வேயில் பயண வசதியை தொழில்நுட்பத்துக்கு ஏற்ப உபயோகம் செய்து தற்போது IRCTC செயலி மூலமாக முன்பதிவு மற்றும் ரயில் வழித்தட விபரங்கள் தெரிந்துகொள்ளப்படுகிறது. இந்த நிலையில் "irctcconnect.apk" என்ற செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என ரயில்வே அமைச்சகம் எச்சரித்துள்ளது.
இந்த குறிப்பிட்ட செயலியை பதிவிறக்கம் செய்ய கோரி வாட்ஸ்அப், டெலிகிராம், முகநூல் உட்பட பல சமூகவலைத்தள பக்கங்களில் தகவல்கள் பரவி வரும் நிலையில், குறிப்பிடப்பட்டுள்ள ஆப் மோசடி கும்பல் மூலமாக பரப்பப்பட்டு வருகிறது என்பதால் அதனை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.