ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
கோழிக்கறிக்காக அடித்துக் கொண்டதில்... தந்தையால் மகன் பலியான பரிதாபம்...!!
கர்நாடகாவில் உள்ள தக்ஷின கன்னடா மாவட்டத்தில் ஒரு வீட்டில் உணவு சாப்பிடுவதில் ஏற்பட்ட தகராரில், ஆத்திரத்தில் தந்தை, கனமான மரக்கட்டையால் மகனை தாக்கியதில் மகன் உயிரிழந்தார்.
தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து கொலை செய்த தந்தையை கைது செய்தனர். இச்சம்பவம், கடந்த செவ்வாய்க்கிழமை தக்ஷின கன்னடா மாவட்டத்தின் சுல்லியா தாலுகாவில் உள்ள குட்டிகர் என்ற இடத்தில் நடந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணையில், உயிரிழநத சிவராமின் தந்தை வீடு திரும்புவதற்குள் வீட்டில் சமைத்து வைத்திருந்த கோழி கறியை சாப்பிடுவதால், தந்தையுடன் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த தந்தை, சிவராமை மரத்தடியால் தாக்கியதில் அவர் உயிழிழந்தது தெரிய வந்துள்ளது.