மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வளர்த்த நாயே எஜமானியை துடிக்க துடிக்க, 82 இடங்களில் கடித்து குதறிய பரிதாபம்...!
மகன் வளர்த்த நாய்களால் 82 வயது ஆசிரியை 12 இடங்களில் கடிபட்டு பலியானார்.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோ கைசர்பாக்கின் பெங்காலி தோலா பகுதியில் வசித்து வருபவர் சுசீலா திரிபாதி (82), ஓய்வு பெற்ற் ஆசிரியர். இவரது மகன் அமீத் ஜிம்மில் கோச்சாக இருக்கிறார். அமீத் பிட்புல் மற்றும் ஒரு லாப்ரடோர் ரக இரண்டு நாய்களை வளர்த்து வந்தார். இதில் பிரவுனி என்று அழைக்கப்பட்ட பிட்புல் ரக நாய் மூன்று வருடங்களுக்கு முன்பு வாங்கியுள்ளனர்.
இந்நிலையில் அமித்தின் தாயார் சுசீலா திரிபாதி இன்று காலை 6 மணிக்கு வீட்டில் தனியாக இருந்துள்ளார், அமித் வழக்கம் போல் ஜிம்மிற்கு சென்று விட்டார். அப்போது பிட்புல் நாய் அமித்தின் தாய் சுசிலா மீது பாய்ந்து அவரை கடித்துக் குதறியது, அவர் கத்திக் கதறி உதவிக்கு அழைத்துள்ளார், ஆனால் யாரும் வருவதற்குள் ரத்த வெள்ளத்தில் சுசிலா பரிதாபமாக உயிரிழந்தார். வீட்டுக்கு வந்த மகன் அமித், தன்னுடைய தாய் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக பல்ராம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், ஆனால் அதிக ரத்தம் போனதால் அவரின் தாய் ஏற்கெனவே உயிரிழந்துள்ளார்.
பிரேதப் பரிசோதனை அறிக்கையில், கழுத்து முதல் வயிறு வரை 12 இடங்களில் நாய்க்கடித்துள்ளது. இது தான் இறப்புக்குக் காரணம் என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து அக்கம் பக்கத்தினர் கூறியது, ஆறு மணியிருக்கும் நாய்கள் பயங்கரமாக குரைத்தன, சுசீலா உதவி கேட்டு கத்தினார். நாய்கள் அவரைக் கடித்துள்ளன. வீட்டுக்கு நாங்கள் போனோம், ஆனால் உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டிருந்தது. பிறகு அமித் வந்து கதவு திறந்த போது சுசீலா ரத்த வெள்ளத்தில் கிடந்தார். எஜமானின் தாயாரையே கடித்துக் குதறியுள்ளது அவர்கள் வளர்த்த நாய். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.