மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
Love | Enjoy | Breakup: காதல், உல்லாசம், பிரேக்கப் கற்பழிப்பு வழக்கு ஆகாது - நீதிபதி தீர்ப்பு.!
படித்த பெண் தன்னை ஒருவர் காதலிக்கிறார் என்றால், அவருடன் ஏன் பாலியல் உறவு வைத்துக்கொள்ள வேண்டும்?. திருமணத்திற்கு முந்தையை பாலியல் உறவால் ஏற்படும் பிரச்சனை குறித்து படித்த பெண்ணுக்கு தெரியாதா?. 2 வருட காதல், உல்லாசம் மற்றும் உடலுறவு, பெண்ணை ஏமாற்றி செல்லுதல் இவ்வழக்கில் கற்பழிப்பு குற்றம் ஆகாது என இராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்து இருக்கிறார்.
ஜெய்ப்பூர் நகரில் வசித்து வரும் இளம்பெண்ணும், இளைஞரும் காதலித்து வந்த நிலையில், இருவரும் பலமுறை தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். 2 வருடமாக ஜோடி காதலித்து வரும் நேரங்களில் காதலனின் வற்புறுத்தலின் பேரில், காதல் திருமண வார்த்தைக்கு மயங்கி காதலருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இவ்வாறாக காதல் ஜோடி காதல் மாயையில் உல்லாசத்துடன் சிறகடித்து பறக்க, காதலன் திடீரென பெண்ணிடம் இருந்து விலக தொடங்கியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த காதலி காதலனிடம் பேச முற்பட்டபோது, உன்னை என்னால் திருமணம் செய்ய இயலாது. நீ என்னிடம் இருந்து பிரிந்து சென்றுவிடு என்று கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த காதலி கெஞ்சி கூத்தாடி பார்த்தும் பலனில்லாத நிலையில், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, காதலனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த பலாத்கார வழக்கு தொடர்பான விசாரணை இராஜஸ்தான் மாநில ஜெய்ப்பூர் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு இன்று நீதிபதி ஃபர்ஜந்த் அலி முன்னிலையில் இறுதி விசாரணை மற்றும் தீர்ப்புக்காக வாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி, "2 வருடமாக காதல் ஜோடிகள் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் முதலில் மனம் ஒப்புக்கொண்டு பரஸ்பரம் உடலுறவு கொண்டுள்ளனர்.
கற்பழிப்பு என்றால் பெண்ணை வலுக்கட்டாயப்படுத்தி கற்பழித்து இருக்க வேண்டும். 2 வருடமாக காதலிக்கும் போது, ஆணொருவரின் ஆசை வார்த்தையை நம்பி அவ்வாறு செயல்படுவது சரியா?. மிரட்டி தன்னை ஆசைக்கு இணங்கவைத்தார் என்று கூறினால், சம்பவ நாளிலேயே புகார் அளித்திருக்க வேண்டும். 2 வருடம் காதலருடன் வாழ்ந்து, அவர் கைவிட்டு சென்றதும் பலாத்கார புகார் எப்படி கொடுக்க இயலும்?.
படித்த பெண்மணி திருமணத்திற்கு முந்தைய காதல், உடலுறவால் ஏற்படும் தீமைகளை அறிந்திடாமல் இருப்பாரா?. நன்கு படித்த பெண்மணி காதலர் என்பவர் கூறும் ஆசை வார்த்தைக்கு எப்படி மயங்கி செயல்படுகிறார்கள்?. 2 வருடம் கழித்து புகார் அளித்துள்ளது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகளின் கீழ் வராது. ஆகையால் காவல் துறையினர் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை இரத்து செய்து உத்தரவிடுகிறேன்" என்று தீர்ப்பளித்தார்.