ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
பெண்ணின் விரல், காதுகளை அறுத்து மோதிரம், கம்மல் கொள்ளை... நடுரோட்டில் நடந்த பயங்கரம்.!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள குல்காம் மாவட்டம், அக்ரூ கிராமத்தை சேர்ந்த பெண்மணி தனது வயல்வெளி நோக்கி பயணம் செய்துகொண்டு இருந்தார். அப்போது, அவ்வழியில் முன்னதாகவே காத்திருந்த கொள்ளையன், பெண்ணை பின்னால் இருந்து பின்தொடர்ந்து தாக்கியுள்ளான்.
இதனால் தலையில் காயமடைந்த பெண்மணி மயக்கமடையவே, கொள்ளையன் சூழ்நிலையை தனது சாதகமாக்கி இருக்கிறான். மேலும், பெண்மணி அணிந்திருந்த மோதிரம், கம்மல் உட்பட தங்க ஆபரணத்தை அபகரிக்க முயற்சித்துள்ளார்.
பெண்ணின் கை விரலில் இருந்த மோதிரம் கழற்ற இயலாததால், ஆத்திரமடைந்த கொள்ளையன் பெண்ணின் விரலை வெட்டியடுத்துள்ளான். மேலும், காதில் இருந்த கம்மலையும் அறுத்து தப்பி சென்றுள்ளான். இதனால் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய பெண்மணியை, அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், கொள்ளையனை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.