மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கல்யாணம் ஆயிருச்சு., ஜீன்ஸ் போடாதன்னு சொன்ன கணவருக்கு கத்திக்குத்து? மருமகள் மீது மாமியார் அதிரடி புகார்..!!
ஜீன்ஸ் பேண்ட் போடக்கூடாது என கூறியதற்காக தன் மகனை, மருமகள் கொலை செய்துவிட்டார் என மாமியார் புகார் அளித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் கோபல்புரா கிராமத்தை சேர்ந்தவர் புஷ்பா ஹேம்ப்ராம் (வயது 17). இவரது கணவர் அந்தோலன் துடு (வயது 18). இவர்கள் இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த ஜூலை 12ஆம் தேதி புஷ்பா 2 புதிய ஜீன்ஸ் பேண்ட்களை வாங்கி வந்துள்ளார்.
இதனை கண்ட அந்தோலன் அவரை கண்டித்து திருமணமானவர்கள் ஜீன்ஸ் அணியக்கூடாது என்று கூறியுள்ளார். கோபமடைந்த புஷ்பா கணவனிடம் சண்டையிட்டுள்ளார். பின்னர் வெளியே சென்று வந்த அந்தோலன் குடிபோதையில் அங்கிருந்த மூங்கில் குவியல் அடங்கிய புதரில் விழுந்துள்ளார்.
அந்தோலனை மீட்ட புஷ்பா அவரை உள்ளே அழைத்து சென்றுள்ளார். இந்த நிலையில் மறுநாள் அந்தோலனின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் அவரது உறவினர் ஜம்தாரா, டவுனில் உள்ள மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளார். அவர்கள் தன் பட்டிலுள்ள பட்டிலிபுத்ரா மருத்துவமனையில் அனுமதிக்க பரிந்துரைத்த நிலையில், ஜூலை 16ஆம் தேதி அவர் உயிரிழந்துள்ளார்.
இதனால் மனமுடைந்த அந்தோலனின் தாய் மருமகள் தனது மகனை கத்தியால் குத்தி கொன்றுவிட்டார் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையில், எந்த துப்பும் கிடைக்காததால் புஷ்பாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னே நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.