திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஓடும் இரயிலில் ஏற முயற்சித்து, நூலிழையில் உயிர் தப்பிய பெண்மணி; இரயில்வே பாதுகாப்புப்படை அதிகாரியின் துரித செயலால் தப்பிய உயிர்.!
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பொக்காரோ இரயில் நிலையத்தில், இரயில்வே காவல் அதிகாரியாக பணியாற்றி வரும் நபர் சுபாஷ் குமார்.
இவர் சம்பவத்தன்று பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார். அப்போது, இரயில் தனது பயணத்தை தொடங்கி தனது நடைமேடையில் இருந்து நகர்ந்து சென்றது.
அப்போது ஒரு ஆண், பெண் என 2 பேர் இறுதி நேரத்தில் இரயிலை பிடிக்க வந்துள்ளனர். ஆண் இரயிலில் ஏறிவிட, பெண் ஏறும் முயற்சியில் தோல்வியுற்று கீழே விழுந்தார்.
அந்த சமயத்தில், அவரின் பின்னால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த சுபாஷ் குமார், சுதாரிப்புடன் விரைந்து செயல்பட்டு பெண் பயணியின் உயிரை காப்பாற்றினார்.
இந்த வீடியோ விழிப்புணர்வுக்காக இரயில்வே பாதுகாப்புத்துறை பக்கத்தில் பதிவு செய்யப்பட்டு, ஓடும் இரயிலில் ஏறவோ, இறங்கவோ வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Sharp instincts & alertness of #RPF Head Constable Subhas Kumar saved a lady passenger from a perilous situation at Bokaro railway station.
— RPF INDIA (@RPF_INDIA) July 13, 2023
Boarding or alighting from a moving train is a big NO, wait for the train to come to a complete stop.#MissionJeevanRaksha #BeResponsible pic.twitter.com/FmPNCp5CeY