மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கிய பள்ளி பேருந்து; 15 மாணவ-மாணவியர்கள் காயம்.!
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி, மந்தர் பகுதியில் செயின்ட் மரியா பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு சொந்தமான வாகனம், இன்று காலை பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு வந்துள்ளது.
பள்ளியில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவுக்குள் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 15 மாணவ - மாணவியர்கள் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து நிகழ்விடம் விரைந்த காவல் துறையினர், காயமடைந்தோரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதி செய்தனர். இவர்களில் ஒரேயொரு சிறுவனுக்கு மட்டும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.