மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாபர் மசூதியை மீண்டும் கட்ட வேண்டும் - கல்லூரி வளாகத்தில் சர்ச்சை வாசகம்.!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு தற்போது நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் ராமர் கோயில் கட்டப்பட்டது. ஜனவரி 22-ம் தேதி சிலை நிறுவுதல் மற்றும் மகா கும்பாபிஷேகம் ஆகிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
இந்த நிகழ்வில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட இந்திய அளவிலான அரசியல் தலைவர்கள், முக்கிய பிரபலங்களும், பக்த கோடிகளும் கலந்து கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் அங்குள்ள ஜே.என்.யூ கல்லூரியில் பாபர் மசூதியை மீண்டும் கட்ட வேண்டும் என்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகிய நிலையில், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.