ஆஸ்கரில் இடம்பெற்ற கங்குவா திரைப்படம்; ரசிகர்கள் மகிழ்ச்சி.!
#Breaking: கள்ளக்குறிச்சி விஷ சாராயம் குடித்து 35 பேர் பலி., 10 பேர் கைது.. முக்கிய குற்றவாளிக்கு வலைவீச்சு.!
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டதை வாங்கிக்குடித்த 105 பேர், நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அடுத்தடுத்து கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர். கள்ளக்குறிச்சி நகரிலேயே விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயம், தற்போது வரை மொத்தமாக 35 பேரின் உயிரை பறித்து இருக்கிறது. 80 பேர் தொடர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.
சிபிசிஐடி விசாரணை
கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறியதாக மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங், துணை கண்காணிப்பாளர், மதுவிலக்குத்துறை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் என 9 பேர் அதிரடியாக பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். இதனிடையே, கள்ளச்சாராய மரணம் குறித்து தமிழ்நாடு அரசு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டு இருக்கிறது.
இதையும் படிங்க: கடைசியா ஒரேயொரு தடவை... கெஞ்சிய கள்ளக்காதலன்.. மறுப்பு தெரிவித்த பெண் பேருந்து நிலையத்தில் படுகொலை.!
2 பெண்கள் உட்பட 10 பேர் கைது
கள்ளச்சாராய மரண விவகாரம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை மட்டுமல்லாது, தமிழகத்தையும் சோகத்தில் தள்ளி இருக்கிறது. இதனிடையே, நேற்றே கள்ளச்சாராய விற்பனை குறித்த விசாரணைக்கு பின்னர் கோவிந்தராஜ் என்ற வியாபாரி கைது செய்யப்பட்டார். இவரிடம் நடந்த விசாரணைக்கு பின் அவரின் தாய், சகோதரர் தாமோதரன், மனைவி ரேவதி என 2 பெண்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முக்கிய குற்றவாளிக்கு வலைவீச்சு
இவர்களில் கோவிந்தராஜின் மீது 50 வழக்குகள் கள்ளச்சாராயம் உட்பட பல்வேறு விவகாரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. குண்டரிலும் அவர் சிறையில் முன்னதாக அடைக்கப்பட்டு இருக்கிறார். தற்போது ஜாமினில் வெளியே சுற்றிவயவர்கள் தற்போது பெரும் சோகத்திற்கு காரணமாக இருந்துள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியான சின்னத்துரை என்பவரை அதிகாரிகள் தேடி வருகின்றனர். இவர்களிடம் இருந்து 900 லிட்டர் விஷ சாராயம் பறிமுதல் செய்யபட்டுள்ளது.
இதையும் படிங்க: "தலித் உன்னால என்ன பண்ண முடியும்?" - அரசு அதிகாரியின் பகிரங்க மிரட்டல்.. பெரம்பலூரில் அதிர்ச்சி சம்பவம்.!