கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
"தலித் உன்னால என்ன பண்ண முடியும்?" - அரசு அதிகாரியின் பகிரங்க மிரட்டல்.. பெரம்பலூரில் அதிர்ச்சி சம்பவம்.!
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை, மேட்டுப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றி வருபவர் அஞ்சலகம் பெரியசாமி. இவர் தலித் சமூகத்தை சேர்ந்தவர் ஆவார். மேட்டுப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ், தானிய உலர்களம் & சேமிப்பு கிடங்கு கட்டுவதற்கு அரசு சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.
இந்த டெண்டரை, மேட்டுப்பாளையம் ஊராட்சியின் முன்னாள் தலைவர், திமுக பிரதிநிதி கருணாநிதி கைப்பற்றி இருக்கிறார். தானிய உலர் களம் அமைக்க அரசு மருத்துவமனை மற்றும் குடிநீர் கிணறு அருகில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது ஊராட்சி மன்ற தலைவரின் அனுமதி இன்றி தன்னிச்சையாக நடந்துள்ளது.
ஆளுங்கட்சி செல்வாக்கு
சம்பந்தப்பட்ட இடத்தில் களம் அமைக்கப்படும் பட்சத்தில் மக்களுக்கு சுவாச கோளாறு ஏற்படும். குடிநீர் மாசடையும் என்ற காரணத்தால், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஒப்புதலுடன் வேறு இடத்தில் அமைக்க கருணாநிதியிடம் முறையிடப்பட்டுள்ளது. ஆனால், அதனை ஏற்றுக்கொள்ளாத கருணாநிதி, தனது ஆளுங்கட்சி செல்வாக்கை பயன்படுத்தி ஊராட்சி மன்ற தலைவரை பெண் எனவும் பாராது வாக்குவாதம் செய்து பேசி இருக்கிறார்.
இதையும் படிங்க: வயிற்று வலியால் நடந்த சோகம்; அதிமுக பிரமுகர் தூக்கிட்டு தற்கொலை.!
இந்த விஷயம் குறித்து ஊராட்சிமன்ற தலைவர் அஞ்சலம் பெரியசாமி மாவட்ட ஆட்சியர், திட்ட இயக்குனரிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன் வேப்பந்தட்டை வட்டாட்சியர் முன் ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சலகம், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் மற்றும் காண்ட்ராக்டர் கருணாநிதி ஆகியோரிடம் சுமூக பேச்சுவார்த்தை நடந்தது.
அதிகாரியின் அதிர்ச்சி மிரட்டல்
பேச்சுவார்த்தையின்போதும் முடிவுகள் எட்டப்படாத நிலையில், பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் லலிதா கருணாநிதிக்கு ஒத்துழைப்பு வழங்கு, மீறினால் ஊராட்சிக்கு ஒதுக்க வேண்டிய ரூ.50 இலட்சத்தை தரமாட்டேன், படிப்பறிவு இல்லாத உனக்கெல்லாம் தலைவர் பதவி வேண்டுமா? தலித் சமூகத்தை சேர்ந்த உன்னால் என்ன செய்ய இயலும்? என வசைபாடியுள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட அஞ்சலம் பெரியசாமி, மனஉளைச்சலில் தவித்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதியாகினார். அதனைத்தொடர்ந்து, தன்னை சமூக ரீதியாக இழிவாக பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையேல் வார்டு உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்வோம் என மத்திய மற்றும் மாநில தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்கு புகார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: லாரி - இருசக்கர வாகனம் மோதி விபத்து; இளைஞர் பரிதாப பலி.!