மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வயலில் வேலைபார்த்த பெண், வடமாநில இளைஞரால் கொலை முயற்சி: உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு சம்பவம்.!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை, உளுந்தண்டவர் கோவில் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில், விவசாய பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பணிகளில் உள்ளூரை சேர்ந்த பெண்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், விவசாய நிலத்தில் இருந்த பெண்ணை, அங்கு வந்த வடமாநில இளைஞர் ஒருவர் கத்தியால் வெட்டியுள்ளார். இதனால் பதறிப்போன பெண்மணி அலறவே, அங்கு மக்கள் ஒன்று திரண்டுள்ளனர்.
அதிர்ச்சியடைந்த இளைஞர் அங்கிருந்து ஓட்டமெடுத்து, நகராட்சியில் மின்துறையில் பணியாற்றி வந்த சிவராஜ் என்பவரின் வீட்டிற்குள் புகுந்துள்ளார். இவரைக்கண்ட பொதுமக்கள், மொத்தமாக ஒன்றுதிரண்டு இளைஞரை பிடித்தனர்.
வழிநெடுக தர்ம அடி கொடுக்கப்பட்டு அழைத்து வரப்பட்ட இளைஞர், இறுதியில் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி: எங்க உளுந்தூர்பேட்டை அஜித்