மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழகத்திற்கு ஒரு மத்திய அமைச்சர் கிடைத்திருக்கிறார் என மகிழ முடியவில்லை.! கமல் என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா.?
கடந்த 2019 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக பிரதமர் மோடி தலைமயிலான மத்திய அரசு பதவி ஏற்றது. அதன் பின்னர் மத்திய அமைச்சரவையில் எந்தவிதமான மாற்றமோ அல்லது விரிவாக்கமோ நடக்கவில்லை. இந்தநிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று மாற்றி அமைக்கப்பட்டிருக்கும் நிலையில் புது முகங்களுக்கு இந்தமுறை வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், குடியரசு தலைவர் மாளிகையில் புதிய மத்திய அமைச்சரவை பதவி ஏற்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த புதிய அமைச்சரவையில் 43 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். மாற்றியமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில் புதுமுகமாக தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் எல்.முருகன் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர், மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சராக இடம் பெற்றுள்ளார்.
ஆனால், உள்கட்சித் தலைவர்கள், வேறு கட்சிகளிலிருந்து இணைந்தவர்கள், வரவிருக்கிற மாநில தேர்தல்கள் ஆகியவற்றை மனதில் வைத்து நடந்திருக்கும் இந்த விரிவாக்கம் பாஜகவிற்கு வேண்டுமானால் நன்மை பயக்கலாம். நாட்டிற்கு இதனால் ஆகப்போவதென்ன? (2/2)
— Kamal Haasan (@ikamalhaasan) July 7, 2021
இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழகத்திற்கு ஒரு மத்திய அமைச்சர் கிடைத்திருக்கிறார் என்று மகிழ முடியாதபடி இருக்கிறது அமைச்சரவை விரிவாக்கம். நாடு அனைத்துத் துறைகளிலும் பின்னடைந்திருக்கிறது. இந்தச் சரிவிலிருந்து மீளும் நோக்கத்தில் அமைச்சரவை மாற்றம் நடந்திருக்கவேண்டும். ஆனால், உள்கட்சித் தலைவர்கள், வேறு கட்சிகளிலிருந்து இணைந்தவர்கள், வரவிருக்கிற மாநில தேர்தல்கள் ஆகியவற்றை மனதில் வைத்து நடந்திருக்கும் இந்த விரிவாக்கம் பாஜகவிற்கு வேண்டுமானால் நன்மை பயக்கலாம். நாட்டிற்கு இதனால் ஆகப்போவதென்ன?” என கருத்து தெரிவித்துள்ளார்.