மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஐஐடியில் தொடரும் தற்கொலை: ஆன்லைனில் கயிறு வாங்கி தூக்கிட்டு தற்கொலை.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர், ஐஐடியில் பயின்று வரும் மாணவர்கள் அடுத்தடுத்து மர்மமான முறையில் தற்கொலை செய்து கொள்வது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சார்ந்த கல்லூரி மாணவி பிரியங்கா, கான்பூர் ஐஐடியில் பிஎச்டி பயின்று வந்துள்ளார். இவர் கடந்த பத்தாம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், கடந்த மாதத்தில் இது மூன்றாவது தற்கொலையாகும்.
பெற்றோர் பிரியங்காவுக்கு பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டும் பலனில்லை. இதனை அடுத்து கல்லூரி நிர்வாகத்திற்கு தொடர்பு கொண்டு தெரிவித்தனர்.
அவர்கள் அறையில் சோதித்து பார்த்தபோது மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதற்காக ஆன்லைனில் கயிறும் வாங்கி இருக்கிறார். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.