#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
முதல் மனைவியை மறந்து வேறொரு பெண்ணுடன் தார்மீக காதல்; திருமணம் முடிந்து அம்பலமான குட்டு.. வில்லங்கமான சம்பவத்தால் கம்பி எண்ணும் காவலர்.!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நித்திரவிளை பகுதியை சேர்ந்தவர் பாஸ்டின். இவரின் மூத்த மகள் ரைசா (வயது 27), பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. ரைசாவுக்கும், அம்பாசமுத்திரம் பகுதியில் உள்ள பிரம்மதேசம் பகுதியை சேர்ந்த இளைஞர் ராஜேஷ் (வயது 26) என்பவருக்கும், நேற்று மதியம் கிராத்தூர் பகுதியில் இருக்கும் தேவாலயத்தில் வைத்து திருமணம் நடைபெற்றது.
ராஜேஷ் மணிமுத்தாறு 9வது பட்டாலியன் தலைமை எழுத்தராக வேலை பார்த்து வரும் நிலையில், இவர்களின் திருமணத்தில் உற்றார்-உறவினர், நண்பர்கள் என பலரும் கலந்துகொண்டனர். அப்போது, ரைசாவின் உறவினரான பெண் போலீஸ் ஒருவரும், மணமக்களை வாழ்த்தி, எடுத்துக்கொண்ட புகைப்படத்தை காவலர்களின் வாட்சப் குழுவில் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: இளம்பெண்ணை சீரழித்த இராணுவ வீரர்; திருமணத்திற்கு மறுத்தால் காவல் நிலையம் முன் மோதல்.!
காவல் நிலையத்தில் விசாரணை
அப்போது, ராஜேஷுக்கு முன்னதாகவே பெண்ணுடன் திருமணம் நடந்ததாக அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண்வீட்டார், ராஜேஷ் மற்றும் அவரின் குடும்பத்தினரை சுற்றிவளைத்து, நித்திரவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், ராஜேஷை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். இதில் பல அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியானது.
அதாவது, மணிமுத்தாறு பட்டாலியனில் தலைமை எழுத்தராக பணியாற்றும் ராஜேஷுக்கு, முன்னதாகவே திருமணமாகி மனைவி இருக்கிறார். இவர் காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். கடந்த கொரோனா காலகட்டத்தில் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ரைசா வேளைக்கு சென்றுவரும்போது, ராஜேசுடன் பணிநிமித்தமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.
மனைவியை மறக்கவைத்த காதல்
பின் தனது மனைவியை மறந்த ராஜேஷ், 3 ஆண்டுகளாக ரைசாவை காதலித்து வந்துள்ளார். ரைசாவிடம் தனது தாய் - தந்தை இறந்துவிட்டார், உறவினர்களின் ஆதரவும் இல்லை என கம்பிகட்டிய ராஜேஷ், நண்பர்களே தனது உலகம் என கூறி இருக்கிறார். இதனை நம்பிய ரைசாவும் ராஜேஷை உயிருக்கு உயிராக காதலிக்க, இறுதியில் ராஜேஷின் 5 நண்பர்கள் மற்றும் பெண் வீட்டார் முன்னிலையில் திருமணம் நடந்துள்ளது.
காவல் துறையினர் தேவாலயத்தில் விறுவிறுப்புடன் வந்ததும், நண்பர்களால் தலைதெறித்து ஓடிவிட்டனர். விசாரணைக்கு பின்னர் ரைசாவிடம் புகாரை பெற்றுக்கொண்ட காவல் துறையினர், ராஜேஷை கைது செய்து இஸ்ராயீல் அடைத்துள்ளனர். மேலும், ராஜேஷ் தனது பணியை ராஜபாளையம் பட்டாலியனில் தொடங்கிய சமயத்திலேயே பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அச்சமயம் பெண் வீட்டார் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ராஜேஷ் காதலித்த பெண்ணை வேறொருவருக்கு திருமணம் செய்து வந்துள்ளனர்.
காதலிலும் காதல்
ஆனால், பெண் திருமணம் நடந்த அன்றைய நாளின் இரவே காதலருடன் வர விருப்பப்பட்ட நிலையில், பெண்ணின் கணவர் வீட்டிற்கு சென்று காதலியை தூக்கிவந்து தாலிகட்டி குடித்தனம் நடத்தி வைத்துள்ளார். அந்த பெண்தான் தற்போது காவலர் குடியிருப்பில் குடியிருந்து வரும் அவரின் மனைவி ஆவார். முதல் திருமணம் காதல் திருமணம், அது நடந்து 6 ஆண்டுகள் ஆகும் நிலையில், காதல் மனைவி இருக்கும்போதே மனதை அலைபாயவிட்டவர் தற்போது வழக்கில் சிக்கி இருக்கிறார்.
இதையும் படிங்க: என் மாமன் பொண்ணு மேல ஆசையா?.. 21 வயது இளைஞரின் தலையை துண்டித்து கொன்ற ரௌடி.. விருதுநகரில் பயங்கரம்.!