மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
2 வயது பச்சிளம் பெண் குழந்தை பலாத்காரம், கொலை.. காமக்கொடூரனாக பெரியப்பா.. தம்பியிடம் நடித்து பயங்கரம்.!
தம்பியின் 2 வயது பெண் குழந்தையை சில நாட்கள் கவனித்துக்கொள்வதாக நடித்து வீட்டிற்கு அழைத்து வந்த காமக்கொடூரன், குழந்தையை பலாத்காரம் செய்ததால் பச்சிளம் பிஞ்சு உயிரிழந்த பரிதாபம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், அத்திப்பள்ளி நெரலூர் கேட் பகுதியில் வசித்து வருபவர் தீபு. இவரின் இளைய சகோதரர் தொட்டபுள்ளபுரா பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு 2 வயதுடைய பச்சிளம் பெண் குழந்தை மகளாக இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தீபு தொட்டபுள்ளபுரா சென்றுள்ளார்.
தனது தம்பியின் குழந்தையின் மீது அதிக பாசம் உள்ளவன் போல நடித்த காமுகன், 2 வயது பச்சிளம் பெண் குழந்தையை சில நாட்கள் தன்னுடன் வைத்திருப்பதாக கூறி இருக்கிறான். தீபுவின் தம்பியும் அண்ணன்தானே என்று எண்ணி குழந்தையை அழைத்து செல்ல சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, நெரலூருக்கு குழந்தையை அழைத்து வந்த காமுகன், 2 வயது பச்சிளம் சிசு என்றும் பாராது பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். கயவனின் கொடூரத்தால் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துவிட, அத்திப்பள்ளி காவல் நிலையத்திற்கு சென்ற தீபு, காரில் இருந்து குழந்தை தவறி விழுந்து உயிரிழந்துவிட்டதாக நாடகமாடி இருக்கிறான்.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினருக்கு, விபத்து என்றால் எதற்காக நேரடியாக காவல் நிலையத்திற்கு குழந்தையின் உடலை கொண்டு வர வேண்டும்? மருத்துவமனைக்கு தானே சென்றிருக்க வேண்டும் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் தீபுவிடம் இருந்து குழந்தையை மீட்ட காவல் துறையினர், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் உயிரிழந்தது அம்பலமாகவே, தீபுவை அதிரடியாக கைது செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து சிறையில் அடைத்தனர். 2 வயது பச்சிளம் குழந்தையை பெரியப்பாவே பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.