மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதல் ஜோடி இரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்த சோகம்.. காதல் விவகாரம் தெரியாமல் கதறிய பெற்றோர்.!
உரமாவு பகுதியில் காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், மகளின் தற்கொலைக்கு பின்னர் பெற்றோருக்கு காதல் விவகாரம் தெரியவந்த சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், உரமாவு பகுதியில் இரயில்வே தண்டவாளம் உள்ளது. இந்த தண்டவாளத்தில் இளம்பெண் - வாலிபர் சடலமாக கிடந்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக பையப்பனஹள்ளி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் நடத்திய விசாரணையில், இளம்பெண்ணின் பெயர் சேத்தனா என்பதும், வாலிபரின் பெயர் ஸ்ரீ சந்திரா என்பதும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளனர். தற்கொலைக்கு பின்னர் தான் மகளின் காதல் விவகாரம் சேந்தனாவின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதனால் காதல் ஜோடியின் தற்கொலை தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.