மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிறந்தநாளில் கேக்கை வெட்டுவதாக காதலியின் கழுத்தை அறுத்து கொன்ற காதலன்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!
காதலியின் பிறந்தநாளை சிறப்பிப்பதாக நடித்து, 6 ஆண்டு காதலியை அரை நொடியில் கழுத்தில் குத்தி கொலை செய்த காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு, கனகபுரா பகுதியை சேர்ந்த பெண்மணி நவ்யா (வயது 26). இவர் அதே பகுதியை சேர்ந்த பிரசாந்த் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இவர்கள் இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். கடந்த சில மாதங்களாவே இருவருக்குள்ளும் பிரச்சனை நடந்து வந்துள்ளது.
நவ்யா வேறு சிலரோடு பேசி வந்ததாக கூறப்படும் நிலையில், காதலியின் நடத்தையில் ப்ரசாந்த்திற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 11ம் தேதி நவ்யாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது.
அப்போது, காதலிக்கு கேக் வெட்டுகிறேன் என்று பாவனை செய்த பிரசாந்த், கேக்கை வெட்டும்போது காதலியின் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
பின்னர், அவரின் உடலை அங்கேயே விட்டுவிட்டு அவர் சென்ற நிலையில், அக்கம் பக்கத்தினர் வீட்டில் இருந்து வந்த துர்நாற்ற வாடை வந்ததை தொடர்ந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் நவ்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையை தொடர்ந்து பிரசாந்த் கைது செய்யப்பட்டார்.