#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
உணவு டெலிவரி செய்யவந்த இடத்தில் பெண் பலாத்கார முயற்சி; பெங்களூரில் பெண் ஐ.டி ஊழியருக்கு அதிர்ச்சி.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், புரூக்ஃபீல்ட் பகுதியில், தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இளம்பெண் வசிக்கிறார். இவர் நேற்று மாலை 5 மணிக்கு மேல், தனக்கு உணவு சாப்பிட தோசை ஆர்டர் செய்துள்ளார்.
உணவை டெலிவரி செய்ய வந்த ஊழியர், பெண்ணிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். அவரும் வழங்கி இருக்கிறார். சில நொடிகள் கழித்து தனக்கு அவசரம் என்பதால், தங்களின் கழிவறையை உபயோகம் செய்யலாமா? என கேட்டுள்ளார்.
அவரும் அதற்கு அனுமதி வழங்கிய நிலையில், கழிவறையில் இருந்து வெளியே வந்த இளைஞர் மீண்டும் தண்ணீர் கேட்டுள்ளார். பெண்மணி சந்தேகத்துடன் வாசலில் நிற்குமாறும், தான் எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதனிடையே, பெண்மணியை சத்தமின்றி பின்தொடர்ந்து சென்ற இளைஞர், சமயலறையில் தவறாக நடக்க முயற்சித்துள்ளார்.
இதனால் அதிர்ந்துபோன பெண்மணி கையில் கிடைத்த பொருட்களை எடுத்து தாக்க, இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடி இருக்கிறார். பின் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, அதிகாரிகள் புகாரை ஏற்று அங்கிருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தனர். இதன் வாயிலாக இளைஞர் பி.ஆகாஷ் என்பது தெரியவந்துள்ளது. அவரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.