#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மகளுக்கு பசிக்கு உணவளிக்க முடியாது தவித்த தந்தை.. ஏரியில் வீசி கொலை.. நெஞ்சை உலுக்கும் சோகம்.!
பிட்காயினில் முதலீடு செய்து இழப்பை சந்தித்த தந்தை மகளை கொலை செய்த சோகம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார், கெந்தட்டி கிராமத்தின் ஏரியில் குழந்தை சடலமாக மிதப்பதாக காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் குழந்தையின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில், ஐ.டி எஞ்சினியர் ராகுலின் மகள் என்பது அம்பலமானது. பெங்களூரில் மனைவி பாபியாவுடன் வசித்து வந்த ஐ.டி எஞ்சினியர் ராகுல், கடந்த 6 மாதமாக வேலை ஏதும் இன்றி தவித்து வந்துள்ளார். மேலும், தன்னிடம் இருந்த பணத்தை பிட்காயினில் முதலீடு செய்து இழந்துள்ளார்.
இதனால் கடன் கொடுத்தவர்கள் பலரும் தங்களின் பணத்தை மீண்டும் கேட்டு வந்துள்ளனர். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த ராகுல், தனது மகளுடன் அங்குள்ள ஏரிக்கு சென்று மகளை கட்டியணைத்து விளையாடி இருக்கிறார். மேலும், அவருக்கு பிஸ்கட் வாங்கி கொடுக்க, மகளோ பசிக்கிறது சாப்பாடு வேண்டும் என கேட்டுள்ளார்.
மகளுக்கு பிஸ்கட் வாங்கி கொடுக்க மட்டுமே பணம் வைத்திருந்த ராகுல், வேறு வழியின்றி மகளை ஏரியில் தூக்கி வீசிவிட்டு சென்றுள்ளார். இதனால் சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ராகுலும் தற்கொலை செய்ய முயற்சிக்கவே, தண்ணீர் குறைவாக இருந்ததால் அவர் உயிரிழக்கவில்லை. ராகுலை கைது செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.