திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ரூ.8 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல், விற்பனை.. காதல் ஜோடி உட்பட 3 பேர் பரபரப்பு கைது.. பகீர் தகவல்.!
காதல் ஜோடி எளிதில் பணக்காரர் ஆகி உல்லாசமாக வாழ ஆசைப்பட்டு, கியாஸிஸ் ஆயில் என்ற போதைப்பொருளை கடத்தி விற்பனை செய்து வந்த நிலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களுர் பி.டி.எம் லே-அவுட், அரகா பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக ஹீலிமாவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், சந்தேகத்திற்கு இடமான வகையில் உள்ள இளைஞரை அதிரடியாக கைது செய்தனர்.
அவரிடம் சோதனை செய்தபோது கியாஸிஸ் ஆயில் என்ற போதைப்பொருள் கைப்பற்றப்படவே, காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடந்தது. விசாரணையில், கைது செய்யப்பட்ட இளைஞர் மடிவாளா மாருதி நகரில் வசித்து வரும் விக்கி என்ற விக்ரம் (வயது 23) என்பது தெரியவந்தது.
இவர் அளித்த வாக்குமூலத்தின் பேரில், கேரளாவை சேர்ந்த சிகிள் வர்கீஸ் (வயது 23), ஆவின் காதலி விஷ்ணு பிரியா (வயது 22) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூவரும் கூட்டாக சேர்ந்து, ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் நகரில் இருந்து பெங்களூருக்கு கியாஸிஸ் ஆயிலை கடத்தி விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது.
இவர்களில் சிகிள் வர்கீஸ் மற்றும் விஷ்ணு பிரியா காதலர்களாக இருந்து வந்த நிலையில், எளிதில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு போதைப்பொருள் விற்பனையில் இறங்கியதும் அம்பலமாகியுள்ளது. இவர்களிடம் இருந்து 12 கிலோ கியாஸிஸ் ஆயில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் சந்தை மதிப்பு ரூ.8 கோடி என்றும் கூறப்படுகிறது.