மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலியை குக்கரால் அடித்தே கொன்ற லிவிங் டுகெதர் காதலன்; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் வசித்து வரும் கேரள காதல் ஜோடி பத்மா தேவி (வயது 24), வைஷ்ணவ் (வயது 25). இருவரும் கல்லூரியில் இருந்தே காதலர்களாக இருந்த நிலையில், பெங்களூரில் வேலைபார்த்து பின் லிவிங் டுகெதர் முறையில் வசித்து வந்துள்ளனர்.
இதற்கிடையில், பத்மா தேவிக்கு வேறொருவருடன் பழக்கம் ஏற்பட, அவருடன் பேசி வந்ததாக தெரியவருகிறது. இதனை வைஷ்ணவ் கண்டித்த நிலையில், சம்பவத்தன்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த தகராறின் போது ஆத்திரமடைந்த வைஷ்ணவ், காதலி பத்மா தேவியை பிரஷர் குக்கரை வைத்து தலையில் ஓங்கி அடித்து கொலை செய்துள்ளார். இரண்டு ஆண்டுகளாக இருவரும் ஒன்றாக வசித்து வந்த நிலையில் இச்சோகம் ஏற்பட்டுள்ளது.