மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மனநலம் பாதிக்கப்ட்ட 19 வயது இளம்பெண்ணை பலாத்காரம் செய்த கொடூரம்; 30 வயது நபர் வீடுபுகுந்து துணிகரம்.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், டி-குரூப் லேஅவுட் பகுதியில் குடிசை வீட்டில் 19 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் வசித்து வருகிறார். கடந்த 22ம் தேதி வீட்டில் அவர் தனியே இருந்தபோது, வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் பெண்ணை தாக்கி பலாத்காரம் செய்துள்ளார்.
இந்த விஷயம் பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரியவரவே, அவர்கள் அன்னபூர்ணேஸ்வரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற அதிகாரிகள் விசாரணை நடத்தி, தமிழ்நாட்டை சேர்ந்த கூலித்தொழிலாளி ஜபீ உல்லா இப்ராஹிம் பாஷா (வயது 30) என்பவரை கைது செய்தனர்.
அவர் பெண்ணின் வீட்டருகே வசித்துவந்த நிலையில், சம்பவத்தன்று பெண்ணின் வீட்டிற்குள் ஆட்கள் இல்லாததை அறிந்து துணிகரமாக பலாத்காரத்தை அரங்கேற்றி இருக்கிறார். கைது செய்யப்பட்ட நபர் சிறையில் அடைக்கப்பட்டார்.