திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இடி-மின்னலுடன் திடீர் மழை; ஆடுமேய்த்த பெண், 20 ஆடுகள் பரிதாப பலி.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், கிட்டத்தட்ட 5 மாதங்களுக்கு பின்பு மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியான சூழலுக்கு உள்ளாகியுள்ளனர்.
அங்குள்ள ஹொஸ்கொட் தாலுகா, கங்காளு கிராமத்தில் வசித்து வரும் பெண்மணி ரத்தம்மா. இவர் அங்குள்ள வயல்வெளிகளில் ஆடுகளை மேய்க்க சென்றார்.
தற்போது திடீர் இடி-மின்னலுடன் மழை பெய்து வரும் காரணத்தால் மின்னல் தாக்குதலும் நடந்துள்ளது. அவ்வாறான மின்னல் தாக்குதல் ஒன்றில் சிக்கிய ரத்தம்மா பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், அவரின் 20 ஆடுகளும் மின்னல் தாக்குதலில் பலியாகின. இந்த விஷயம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.