திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஏரியில் குளிக்க, துவைக்க சென்று பரிதாபம்; ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் நீரில் மூழ்கி பலி..!
குழந்தைகளுடன் ஏரியில் குளிக்க சென்ற இருவர் மற்றும் 2 குழந்தைகள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பீதர், ஜானவாடா கங்காட்டி கிராமத்தில் வசித்து வருபவர் ஆனந்தா (வயது 37), சுனிதா (வயது 36). இதில், ஆனந்தாவின் மகன் ப்ரஜ்வல் (வயது 10), சுனிதாவின் மகன் நாகசெட்டி (வயது 8).
இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். நேற்று மதியம் ஆனந்தா மற்றும் சுனிதா தங்களின் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு கிராமத்தில் இருக்கும் ஏரியில் துணி துவைக்க சென்றுள்ளனர்.
குழந்தைகள் இருவரும் ஏரியில் குளித்துக்கொண்டு இருக்க, திடீரென இருவரும் ஆழமான பகுதிக்கு சென்று நீச்சல் தெரியாமல் தத்தளித்துள்ளனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஆனந்தா குழந்தைகளை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார்.
ஆனால், அவரால் குழந்தைகளை காப்பாற்ற இயலாமல் திணறவே, இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சுனிதாவும் மூவரையும் காக்க களமிறங்கியுள்ளார். ஆனால், எதிர்பாராத விதமாக நால்வரும் நீரில் மூச்சுத்திணறி பரிதாபமாக பலியாகினர்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் நால்வரின் உலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.