ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
உயர்அதிகாரிகள் தொல்லையால் அரசு பேருந்து ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை..!
வேலை தொடர்பாக ஓட்டுநர் கேட்ட சான்றிதழை கொடுக்காத அதிகாரிகள், ஓட்டுனருக்கு தொல்லை கொடுத்ததால் அவர் தற்கொலை செய்த சோகம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பீதர் மாவட்டம், உம்னாபாத் ஷின்ஜோலி கிராமத்தில் வசித்து வருபவர் ஓம்கார். இவர் வடகர்நாடக அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.
இவர் உம்னாபாத், பீதர் உட்பட 10 பணிமனையில் ஓட்டுநராக பணியாற்றிய நிலையில், கடந்த சில மாதத்திற்கு முன்னதாக வேலை தொடர்பாக சான்றிதழ் கேட்டு ஓம்கார் விண்ணப்பித்து இருக்கிறார்.
இந்த சான்றிதழை அங்கீகரித்து வழங்காத போக்குவரத்து துறை அதிகாரிகள், ஓம்காருக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதனால் மனமுடைந்துபோன ஓம்கார் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.