மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கோவில் தரிசனம் முடித்து திரும்பியதும் கோரவிபத்து.. டிடிவாகனம் அரசு பேருந்து மீது மோதி 4 குழந்தைகள் உட்பட 9 பேர் பலி..! 5 பேரின் உயிர் ஊசல்..!!
சுற்றுலா பயணிகளுடன் வந்த டிடி வாகனம், அரசு பேருந்து மீது மோதியதில் பயங்கரவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 4 குழந்தைகள் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் மாவட்டம் அரிசி கரே தாலுகாவின் தேசிய நெடுஞ்சாலை 69-இல் அதிகாலை சுற்றுலா பயணிகளுடன் வந்த டிடி வாகனம், அரசு பேருந்து மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
இதில் 4 குழந்தைகள் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பெங்களூருவில் இருந்து தர்மஸ்தலா கோவில் தரிசனம் முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த கோரவிபத்து ஏற்பட்டுள்ளது.
மேலும் டிடி வாகனத்தில் இருந்த 16 பேரில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மீதமுள்ள 5 பேர் பலத்த காயங்களுடன் ஹாசன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஹாசன் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்