மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வரதட்சணை கொடுமையால் பரிதாபம்.. மகனை கொன்று, தாய் குட்டையில் குதித்து தற்கொலை.!
கணவனின் குடும்பத்தார் ஒன்றாக சேர்ந்து வரதட்சணை கொடுமை செய்து வந்தால், பெண்மணி 5 வயது குழந்தையை கொலை செய்து, தானும் தற்கொலை சேட்டுக்கொண்டு உயிரைமாய்த்த பரிதாபம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்கபள்ளாபூர் மாவட்டம், ஹளரஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் செண்னே கவுடா. இவரின் மனைவி நவலதா (வயது 26). தம்பதிகளுக்கு 5 வயதுடைய அஜ்மன் குமார் என்ற மகன் இருக்கிறார். செண்னே கவுடா - நவலதா தம்பதிகளின் திருமணத்தின் போது, நவலதாவின் பெற்றோர் செண்னே கவுடா குடும்பத்தினர் கேட்ட வரதட்சணை கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், மனைவியிடம் கூடுதல் வரதட்சணை கேட்ட செண்னே கவுடா, மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். மேலும், செண்னே கவுடா தனது குடும்பத்தாருடன் சேர்ந்து மனைவியை துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட நவலதா, மகன் அஜ்மன் குமாருடன் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.
அப்போது, மகனை கொலை செய்து தானும் தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற விபரீத எண்ணம் எழுந்துகொள்ளவே, தோட்டத்தில் இருக்கும் பண்ணைக்குட்டைக்கு சென்று மகனை குட்டையில் வீசி கொலை செய்துள்ளார். பின்னர், தானும் அதில் குதித்து உயிரை மாய்த்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக சிட்லகட்டா காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குட்டையில் இருவரின் சடலமும் இருந்ததால் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் உடல் மீட்கப்பட்டு, இருவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், நவலதாவின் கணவர் செண்னே கவுடா, அவரின் தாய் - தந்தையான ராமண்ணா - பில்லம்மா, செண்னே கவுடாவின் சகோதரர்கள் முரளி, சந்துரு, சகோதரி காயத்ரியின் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.