திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அரசு கல்லூரி விடுதியில் மாணவிக்கு பிறந்த குழந்தை.. பிரசவம் பார்த்த வார்டன்..!
விடுதியில் தங்கியிருந்து பயின்று வந்த மாணவி குழந்தையை பிரசவித்த பேரதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்கமகளூர், பேளூரில் அரசு கல்லூரிக்கு சொந்தமான விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் 200 க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கியிருந்து பயின்று வருகிறார்.
இந்நிலையில், இந்த விடுதியில் தங்கியிருந்து இரண்டாம் ஆண்டு பி.யூ.சி படித்து வரும் மாணவி நிறைமாத கர்ப்பமாக இருந்துள்ளார். இவருக்கு வார்டன் விடுதியில் வைத்தே பிரசவம் பார்த்துள்ளார்.
இந்த விஷயம் சமூக நலத்துறை அதிகாரிக்கு மட்டும் தெரிந்துள்ளது. அவர் தவிர்த்து வேறு யாருக்கும் தகவல் தெரிவிக்கப்படவில்லை. பிரசவத்திற்கு பின்னர் மாணவி மற்றும் குழந்தை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டனர்.
அதனைதொடர்ந்தே கல்லூரி விடுதியில் நடந்த சம்பவம் வெளியுலகுக்கு தெரியவந்துள்ளது. மாணவி எப்படி கர்ப்பமாகினார்? எதற்காக யாருக்கும் தெரிவிக்காமல் பிரசவம் நடந்தது? அங்கு நடைபெற்றது என்ன என்பது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.