மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சலுகையை நம்பி ரூ.3.51 இலட்சத்திற்கு அழகுசாதன பொருட்கள் ஆர்டர் செய்த பெண்ணுக்கு நாமம் போட்ட கொள்ளையன்ஸ்..!
ஆன்லைனில் வந்த சலுகை விளம்பரத்தை பார்த்து ரூ. 3 இலட்சத்து 51 ஆயிரத்திற்கு அழகுசாதன பொருட்களை ஆர்டர் செய்த பெண்மணி பகல் மோசடியில் ஏமார்ந்த சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்கமகளூரு சைபர் கிரைம் காவல் நிலையத்தில், கொப்பா கிராமத்தில் வசித்து வரும் பின் எஞ்சினியர் புகார் அளித்துள்ளார். இந்த புகாரில், "பன்னாட்டு நிறுவனம் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. இதன் மூலமாக நான் அழகு சாதனா பொருட்களை வாங்க திட்டமிட்டேன்.
அதற்கு ஏற்றவாறு அவர்களும் அழகு சாதன பொருட்களுக்கு ரூ.5 ஆயிரத்திற்கு ரூ.400 தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்து இருந்தார்கள். நானும் இவ்வாறாக ரூ.3 இலட்சத்து 51 ஆயிரத்திற்கு அழகு சாதன பொருட்களை ஆர்டர் செய்தேன். எனக்கு தற்போது வரை எந்த பொருளும் வரவில்லை. பணமும் கிடைக்கவில்லை.
இந்த விஷயம் தொடர்பாக விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டு இருந்த நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு பேசிய சமயத்தில், அவர்கள் தங்களின் நிறுவன பெயரில் இவ்வாறான விளம்பரம் பதிவிடவே இல்லை என்று தெரிவித்துவிட்டார்கள். இதனால் மர்ம நபர் என்னிடம் ரூ.3 இலட்சத்து 51 ஆயிரத்தை அபகரித்துள்ளார். அவரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்த விசாரணை நடந்து வருகிறது.