மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
30 அடி ஆழ்துளை கிணற்றில் சிக்கிய ஒன்றரை வயது குழந்தை; மீட்பு பணி சிக்கலால் பெற்றோர் கவலை.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள விஜயபுரா மாவட்டம், லச்சன்யா கிராமத்தை சேர்ந்தவர் சதிஷ் முஜகோன்த். இவரின் மகன் சத்விக். இவர்கள் தங்களுக்கு சொந்தமான 4 ஏக்கர் விவசாய நிலத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்கள்.
நேற்று வீட்டுக்கு அருகே சிறுவன் விளையாடிக்கொண்டு இருந்த நிலையில், வீட்டருகே இருந்த 30 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளார். தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர், சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
மேலும், பூமிக்கு அடியில் 5 அடிக்கு கீழ் பாறைகள் இருப்பதால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன. குழந்தைக்கு தேவையான ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது. மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெறும் அதே வேளையில், சிறுவனின் பெற்றோர் குழந்தைக்காக பரிதவித்து வருகின்றனர்.