பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் மாபெரும் போராட்டம்.. மாநில காங்கிரஸ் மூத்த தலைவரை தூக்கிச்சென்று கைது செய்த காவல்துறை.!



Karnataka Congress Protest Siddaramaiah Arrested

 

இலஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிக்கொண்ட பாஜக எம்.எல்.ஏ மகனால் கர்நாடகாவில் அரசியல் ரீதியாக அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து போராட்டம் நடத்தி வருகிறது.

கர்நாடக மாநில பாஜக எம்.எல்.ஏ மாடல் விருபாக்ஷவின் மகன் நேற்று இலஞ்சம் வாங்குகையில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அரசு தொடர்பான பணிக்கு தந்தையின் உத்தரவின் பேரில் அவர் இலஞ்சம் வாங்கியதாக கூறப்பட்டது. 

இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள அம்மாநில எதிர்க்கட்சியான காங்கிரஸ், இன்று மாநிலம் தழுவிய அளவில் தீவிர போராட்டத்தை கையில் எடுத்தது. பெங்களூர் நகரில் வைத்து அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா தலைமையில் போராட்டம் நடைபெற்றது 

karnataka

போராட்டத்தில் மாநில அரசை கடுமையாக விமர்சித்த சித்தராமையா, "கர்நாடக மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. ஆனால், முதல்வர் அப்பட்டமாக அதனை மறுக்கிறார். அமித்ஷா ஒரு பொய் கூறுபவர்" என பேசினார்.

இந்த நிலையில், போராட்டம் நடத்தி வந்த காங்கிரஸ் கட்சியினரை காவல் துறையினர் குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்து இருக்கின்றனர். அந்த வகையில் சித்தராமையாவும் கைது செய்யப்பட்டார்.