#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கணவரை மகள்களுடன் சேர்ந்து கொலை செய்த பாஜக மகளிரணி நிர்வாகி.. பரபரப்பு சம்பவம்.! அதிர்ச்சி காரணம்.!!
சொத்துக்களை தனது பெயருக்கு கணவர் எழுதித்தர மறுப்பு தெரிவித்ததால், மனைவி தனது மகள்களுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள தார்வார், மாரோவாடா கிராமத்தில் வசித்து வருபவர் ஈரப்பா (வயது 45). இவரின் மனைவி ஷோபா. தம்பதிகளுக்கு 2 மகன்கள் உள்ள நிலையில், ஷோபா தார்வார் தாலுகா பாஜக மகளிரணியில் உறுப்பினராக இருந்து வருகிறார்.
இந்நிலையில், ஈரப்பாவின் சொத்துக்களை தனது பெயருக்கு எழுதி வழங்கச்சொல்லி ஷோபா தகராறு செய்து வந்துள்ளார். இந்த விசயத்திற்கு ஈரப்பா மறுப்பு தெரிவிக்கவே, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கணவரை கொலை செய்ய ஷோபா திட்டமிட்டுள்ளார்.
நேற்றுமுன்தினம் வழக்கம்போல ஈரப்பாவிடம் ஷோபா பிரச்சனை செய்யவே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறில் ஆத்திரமடைந்த ஷோபா உருட்டுக்கட்டையை எடுத்து மகள்களுடன் சேர்ந்து ஈரப்பாவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த ஈரப்பா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த ஷோபா காவல் துறையினரிடம் சிக்க கூடாது என்பதற்காக, கணவர் விபத்தில் சிக்கியதாக உடலை மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ளார். ஆனால், உடலில் உள்ள தாக்குதல் காயத்தை கவனித்த மருத்துவர்கள், தார்வார் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் ஷோபா மற்றும் அவரின் மகள்களை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, ஈரப்பாவை மகள்களுடன் சேர்ந்து ஷோபா கொலை செய்தது அம்பலமானது. இதனையடுத்து, 3 பேரின் மீது வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.