#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பச்ச மண்ணைப்போயி.. 15 வயது சிறுமி காதலன் உட்பட 6 சிறுவர்களால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. 3 மாதமாக துயரம்.!
15 வயது சிறுமியை காதலன் உட்பட 6 சிறார்கள் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்த பேரதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள தார்வாட்டை சார்ந்த 15 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் கடந்த 3 மாதமாக மிகுந்த பயம் ரீதியான உணர்வுடன் இருந்து வந்த நிலையில், பெற்றோர்கள் அதனை முதலில் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். கடந்த சில நாட்களாகவே சிறுமியின் பயம் அதிகரித்து எதிர்வினையாற்ற தொடங்கிய நிலையில், பெற்றோர்கள் சிறுமியிடம் விசாரித்துள்ளனர்.
அப்போது, சிறுமி கண்ணீருடன் தெரிவித்த தகவலாவது, "பக்கத்து வீட்டை சார்ந்த சிறுவனும் நானும் காதலித்து வந்தோம். அவன் என்னை கட்டாயப்படுத்தி தனிமையில் இருக்க வைத்தான். நாங்கள் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்த போது, அதனை அவனின் நண்பர்கள் 5 பேர் வீடியோ பதிவு செய்துகொண்டனர்.
பின்னர், அந்த வீடியோவை என்னிடம் காண்பித்து, அவர்கள் 6 பேரும் என்னை ஆசைக்கு இணங்க வற்புறுத்தினார்கள். மீறினால் வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டினார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் நான் விழிபிதுங்கிய தருணத்தில், அவர்கள் 6 பேரும் என்னை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்தனர்.
மேலும், இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டினார்கள். கடந்த 3 மாதமாக அவர்கள் என்னை தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருகிறார்கள். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை" என்று கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், தார்வாட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டு, அவரது மைனர் காதலன் உட்பட 6 சிறார்களை கைது செய்தனர். இவர்கள் அனைவரும் தற்போது சிறார் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளனர்.