மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வரதட்சணை கேட்டு பயங்கரம்; மனைவியை கொலை செய்த கணவன்.. தற்கொலை நாடகமாடியது அம்பலம்.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் மாவட்டம், சின்னராயப்பட்டணா பகுதியில் வசித்து வருபவர் குரு ராஜ் (வயது 34). இவரின் மனைவி ஹேமாவதி (வயது 28). தம்பதிகளுக்கு சொந்த ஊர் சிக்கமகளூர் ஆகும்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது இரண்டு குழந்தைகளும் உள்ளனர். திருமணம் முடிந்த நாள் முதலாகவே வரதட்சணை கேட்டு கொடுமை செய்து வந்த குருராஜ் பல இன்னல்களை இழைத்துள்ளார்.
இதனால் மன உளைச்சலில் காணப்பட்டு வந்த ஹேமாவதி, நேற்று காலை தனது கணவர் மற்றும் குழந்தைகள் வெளியே சென்ற போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என குருராஜ் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்துகையில், ஹேமாவதியின் கழுத்தில் காயங்களும் இருந்துள்ளன. இதனால் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பகிர் உண்மை அம்பலமானது.
அதாவது, வரதட்சணை வாங்கி வர மறுத்ததால் ஹேமாவதி கழுத்தை நெரித்து கொலை செய்த குருராஜ், காவல்துறையினர் பிடியில் இருந்து தப்பிக்க மனைவி தற்கொலை செய்துவிட்டதாக நாடகம் ஆடியது உறுதியானது. விசாரணைக்கு பின்னர் குருராஜ் கைது செய்யப்பட்டார்.