மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குழந்தைகள் கண்முன்னே மனைவி, கள்ளகாதலனால் தந்தை கொலை.. காலில் விழுந்து கதறிய பிஞ்சுகள்., நடந்த பயங்கரம்.!
கள்ளக்காதலன் மற்றும் மனைவியால் கணவன் குழந்தைகள் கண்முன் கொலை செய்யப்பட்ட பயங்கரம் அதிரவைத்துள்ளது. கள்ளக்காதலை கண்டித்த கணவனுக்கு மனைவி கொடுத்த பேரதிர்ச்சி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கலபுராகி மாவட்டம், ஷின்ஜோலி குட்டஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் ராமண்ணா. இவர் விவசாயி. ராமண்ணாவின் மனைவி சுனிதா. தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதே கிராமத்தை சேர்ந்தவர் மல்லப்பா.
சுனிதாவிற்கும் - மல்லப்பாவிற்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த கள்ளக்காதல் விவகாரம் ராமண்ணாவுக்கு தெரியவந்துள்ளது.
இதனால் மனைவி சுனிதாவை கண்டிக்கவே ராமண்ணா கண்டிக்கவே, அதனை கண்டுகொள்ளாத கள்ளக்காதல் ஜோடி உல்லாச வாழ்க்கையை தொடரவே விரும்பியுள்ளது. இந்நிலையில், நேற்று இரவு ராமண்ணாவின் வீட்டிற்கு வந்த மல்லப்பா, கள்ளக்காதலி சுமிதாவுடன் சேர்ந்து ராமண்ணாவின் கழுத்தை நெரித்துள்ளார்.
ராமண்ணாவின் குழந்தைகள் தந்தையை விட்டுவிடக்கூறி மல்லப்பாவின் காலில் விழுந்து கதறியும் கேட்காது துள்ளத்துடிக்க ராமண்ணா கொலை செய்யப்பட்டுள்ளார். குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், ராமண்ணாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், மல்லப்பா மற்றும் சுனிதாவின் மீது வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்துள்ளனர்.