மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெண்ணை காதலித்து, விடுதியில் கற்பழித்து கைவிட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி.. பரபரப்பு புகார்.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள கலபுராகி மாநகராட்சி ஆணையராக பணியாற்றுபவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி சினேகல் லோகாண்டே. இவரின் மீது இளம்பெண் ஒருவர் காதலித்து ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக புகார் அளித்துள்ளார்.
டெல்லியை சார்ந்த இளம்பெண் இந்த குற்றசாட்டை தெரிவித்துள்ள நிலையில், கடந்த 2019 ஆம் வருடம் முதல் சினேகல் லோகாண்டே தன்னுடன் பழகி வந்ததாகவும், தன்னை திருமணம் செய்வதாக கூறி விடுதிக்கு அழைத்து சென்று கற்பழித்து ஏமாற்றிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், பலமுறை விடுதிக்கு அழைத்து சென்று மயக்க மாத்திரை கொடுத்து பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்ததாகவும், காதலன் கரம்பிடித்து விடுவான் என்ற நம்பிக்கையில் பெண் அனைத்திற்கும் ஒத்துழைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதுமட்டுமல்லாது, புகார் குறித்து ஆதாரத்தை தெரிவிக்கும் பொருட்டு, தன்னுடன் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆபாசமாக சேட்டிங் செய்த புகைப்பட பதிவையும் பெண் வெளியிட்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக பிரதமர், உள்துறை அமைச்சர், கர்நாடக முதல்வர் என பலருக்கும் பெண் புகார் அனுப்பியுள்ளார்.
புகார் அனுப்பி ஒருவார காலம் ஆகியும் எந்த விதமான பதிலும் வராததால், பெண்மணி தனது புகாரை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இதுகுறித்த குற்றசாட்டுகளை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ள சினேகல் லோகாண்டே ஐ.ஏ.எஸ், அவதூறு வழக்கு பெண் மீது தொடுக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.