மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதிவேக பயணம்.. மரத்தில் மோதி அப்பளமாக நொறுங்கிய கார்.. கோர விபத்தில் 5 பேர் பரிதாப மரணம்.!
திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தில் மோதி விபத்திற்குள்ளானதில், 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கலபுராகி, அப்சல்புரா தேவலகனகாபுரா நெடுஞ்சாலையில் கார் சென்றுகொண்டு இருந்தது. இந்த கார் திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி விபத்திற்குள்ளது.
அதிவேகத்துடன் பயணித்து விபத்து நிகழ்ந்த காரணத்தால், அப்பளம் போல கார் நொறுங்கியது. இந்த விபத்தில், கார் ஓட்டுநர் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், குழந்தை உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், உயிருக்கு போராடியவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், விபத்தில் உயிரிழந்தவர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பாபா ஷாகேப் (வயது 54), பாபாவின் மனைவி சாயா, மகள்கள் கோமாளி, ராணி, ஈராபாய் என்பது உறுதியானது. விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.