#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
முன்விரோதம்.. முன்னாள் பஞ்சாயத்து ஊழியரை சரமாரியாக குத்தி கொலை செய்த பயங்கரம்.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் மாவட்டம் பங்காருபேட்டை, தம்பெனஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் கிருஷ்ணப்ப கவுடா (வயது 53). இவர் முன்னாள் கிராம பஞ்சாயத்து உறுப்பினர் ஆவார்.
இதே கிராமத்தை சேர்த்தவர் வெங்கடேஷ் (வயது 52). இவர்கள் இருவருக்கும் இடையே நிலப்பிரச்சனை இருந்து வந்த நிலையில், சம்பவத்தன்று இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
அப்போது, ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற வெங்கடேஷ், கிருஷ்ணப்ப கவுடாவை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். பின்னர், அவர் அங்கிருந்து தப்பி சென்றுவிடவே, இந்த விஷயம் தொடர்பாக பொதுமக்கள் பங்காருபேட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், கிருஷ்ணப்ப கவிதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, தலைமறைவாக இருந்த வெங்கடேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.