கிருத்துவ பிரசுரங்களை தீயிட்டு எரித்ததால் பரபரப்பு.. மதமாற்றம் செய்ய முயற்சித்ததால் பரபரப்பு.!



karnataka-kolar-hindu-peoples-burned-christian-advertis

கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் நகர் தேவாலயத்தின் சார்பில், இந்துக்களை கிருத்துவ மதத்திற்கு மாற்றம் செய்வதாக கூறி வலதுசாரி அமைப்பினர் கிருத்துவ பிரச்சார புத்தகத்தை தீ வைத்து கொளுத்தியால் பரபரப்பு ஏற்பட்டது. 

கிருத்துவ மதத்தை சார்ந்த சிலர் வீடு வீடாக சென்று மதபோதனை செய்து, மத பிரச்சார புத்தகங்களை விநியோகம் செய்து வந்துள்ளனர். இதன்போது, அங்கு வலதுசாரி அமைப்பை சார்ந்த நபர்கள் வருகை தந்து, கிருத்துவ மதத்தினரை தடுத்து நிறுத்தினர். மேலும், இந்துக்களை மதமாற்றம் செய்ய முயற்சி நடைபெறுவது குறித்து சரமாரி கேள்விகளை முன்வைத்தனர். 

karnataka

ஒருகட்டத்தில், ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற நபர்கள், அவர்கள் வைத்திருந்த கிருத்துவ புத்தகத்தை பிடுங்கி தீ வைத்து கொளுத்தினர். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்போது வரை யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த விஷயம் தொடர்பாக அதிகாரி தெரிவிக்கையில், "வீடு வீடாக சென்று மாதவிரோதத்தை ஏற்படுத்த வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

இருதரப்பினரும் சுமூகமாக பேசி பிரச்சனைக்கு அவர்களாகவே தீர்வு கண்டுள்ளனர்" என்று தெரிவித்தார். மேலும், கட்டாய மதமாற்றம் குறித்த மசோதா குளிர்கால கூட்டத்தொடரின் போது விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்து இருக்கிறார்.