மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"வாழ்ந்தால் உன்னோடு, இல்லையேல் மண்ணோடு".. தூக்கில் தொங்கிய கள்ளக்காதல் ஜோடி..!
கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் மாவட்டம், மதனப்பள்ளி பகுதியில் வசித்து வருபவர் அனுசுயா (வயது 35). திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கின்றனர்.
இதனிடையே, அனுஷியாவுக்கும் - அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் (வயது 27) என்ற வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. அவ்வப்போது தனிமையில் கள்ளக்காதல் ஜோடி உல்லாசமாகவும் இருந்துள்ளது.
இந்த விவகாரம் அனுஷியாவின் கணவருக்கு தெரியவரவே, அவர் மனைவியை கண்டித்துள்ளார். இதனிடையே, 2 குழந்தைகளை தவிக்கவிட்ட அனுசுயா, கள்ளகாதலருடன் ஓட்டம் பிடித்துள்ளார். அவரை எங்கும் தேடியும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரை ஏற்ற அதிகாரிகள் பெண்ணை மீட்டு குடும்பத்திடம் ஒப்படைக்கவே, சில மாதங்கள் வரை எந்த பிரச்சனையும் இல்லை. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது தாயாரை பார்க்க கள்ளக்காதலன் விஜய் வருகை தந்துள்ளார். அவரை அனுசுயா சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கள்ளக்காதல் ஜோடி அங்குள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது. இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், இவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணை நடந்து வருகிறது.