#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பள்ளியில் படிக்கும் சிறுமியுடன் காதல்.. பெற்றோர் கண்டிப்பால் காதல் ஜோடி தூக்கிட்டு சாவு..!
16 வயது சிறுமியை 27 வயது வாலிபர் காதலித்து வந்த நிலையில், இருதரப்பு பெற்றோரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கோளாறு காதல் ஜோடி தற்கொலை செய்தது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் மாவட்டம், சீனிவாசப்பூர் யலவனஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் கங்காதர் (வயது 27). இவர், அதே பகுதியில் வசித்து வந்த 16 வயது சிறுமியை காதல் வலையில் வீழ்த்தியதாக தெரியவருகிறது. படிக்கும் வயதில் பருவகாதலில் விழுந்த சிறுமியும் கங்காதாரை காதலித்து வந்துள்ளார்.
இந்த காதல் விவகாரம் இருதரப்பு பெற்றோருக்கும் தெரியவரவே, கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இருவரும் தங்களின் பிள்ளைகளை கண்டித்த நிலையில், காதல் ஜோடியோ காதலில் உறுதியாக இருந்துள்ளது. மேலும், நீயில்லாமல் நான் இல்லை என்பதால், இருவரும் தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற எண்ணத்திற்கும் சென்றுள்ளது.
இதனையடுத்து, கங்காதர் - சிறுமி வீட்டில் இருந்து வெளியேறி, யலவனஹள்ளி கிராமத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த சீனிவாசப்பூர் காவல் துறையினர், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.