#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
6 மாதமாக சிறுமியை சீரழித்த கொடூரம்.. கர்ப்பமானதும் கழுத்தை நெரித்து கொலை..!
கர்நாடகா மாநிலத்தில் உள்ள மண்டியா மாவட்டம், கே.ஆர் பேட்டையை அடுத்துள்ள கிராமத்தை சார்ந்த துப்புரவு தொழிலாளியின் மகளுக்கு 14 வயது ஆகிறது. சிறுமி அங்குள்ள பள்ளியில் 8 ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். சிறுமியின் பக்கத்து வீட்டினை சார்ந்தவர் பரமேஷ் (வயது 46). சிறுமியின் தாய் - தந்தை இருவரும் துப்புரவு பணியாளர்கள் என்பதால், காலையில் வேலைக்கு சென்றால் மாலையில் தான் வீட்டிற்கு வருவார்கள்.
சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்து வரும் நிலையில், இதனை தனக்கு சாதகமாக்கிய பரமேஷ் சிறுமியை வலுக்கட்டாயப்படுத்தி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்திடுவேன் என்றும் மிரட்டியதால், சிறுமி யாரிடமும் இதுகுறித்து தெரிவிக்காமல் இருந்துள்ளார்.
சிறுமியின் பயத்தை மீண்டும் தனக்கு சாதகமாக்கிய பரமேஷ், சிறுமியின் பெற்றோர்கள் இல்லாத நேரத்தில் அவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். கடந்த 6 மாதமாக சிறுமி நரக வேதனையில் தவித்து வந்துள்ளார். இப்படியான நிலையில், சிறுமி கர்ப்பமாகவே பரமேஷ் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். பின்னர் விஷயம் வெளியே தெரிந்தால் சிக்கிக்கொள்வோம் என்று நினைத்து, சிறுமியை கொலை செய்ய எண்ணியுள்ளார்.
நேற்று முன்தினம் சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது, பச்சிளம் சிறுமியை சீரழித்து கர்பிணியாக்கியது போதாது என்று எண்ணி, அவரின் கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை தூக்கில் தொங்கவிட்டு தப்பி சென்றுள்ளார். மாலையில் வீட்டிற்கு வந்த பெற்றோர் மகள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்து, மகளின் உடலை கட்டியணைத்து கதறி அழுதுள்ளனர்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த கே.ஆர் பேட்டை காவல் துறையினர், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமி கர்ப்பிணியாக இருப்பதும், அவரின் கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பதும் உறுதியானது.
காவல் துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தும் போது, பரமேஷ் தலைமறைவாகியுள்ளார். பரமேஷின் மீது சந்தேகமடைந்த காவல் துறையினர், அவரை கைது செய்து விசாரணை செய்ததில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததில் அவர் கர்ப்பமானதும், அதனால் கொலை நடந்ததும் உறுதியானது.
இந்த தகவல் அம்மாவட்டம் முழுவதும் தெரியவரவே, எஸ்.டி அமைப்பினர் மண்டியா மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர்.