ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
கள்ளத்தொடர்பை கைவிட்ட கள்ளகாதலனின் குடும்பமே கொலை.. பெண் பரபரப்பு செயல்.. அதிர்ந்துபோன அதிகாரிகள்.!
கள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரமடைந்த பெண், கள்ளகாதலனின் குடும்பத்தையே கொலை செய்து உறவினர்கள் முன்னிலையில் நாடகமாடிய பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. குடும்பத்தினர் 5 பேர் கொலை வழக்கில் துப்பு கிடைக்காமல் திணறிய காவல் துறையினர், விசாரணையில் பேரதிர்ச்சி திருப்பமாக பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்த சம்பவம் மாண்டியவை அதிரவைத்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டாணா, கே.ஆர்.எஸ் கிராமம் பஜார் லைன் பகுதியில் வசித்து வருபவர் கங்காராம். இவரின் அண்ணன் கணேஷ். இவர்கள் இருவரும் வியாபாரம் மற்றும் சுயதொழில் செய்து வரும் நிலையில், வியாபார ரீதியாக வெளியூர் சென்றால் 2 மாதத்திற்கு ஒருமுறை வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், கடந்த பிப். 5 ஆம் தேதி சகோதரர்கள் வெளியூர் சென்றுள்ளனர்.
வீட்டில் கங்காராமின் மனைவி லட்சுமி (வயது 32), குழந்தைகள் ராஜ் (வயது 12), கோமல் (வயது 7), குணால் (வயது 5) மற்றும் கணேஷின் மகன் கோவிந்த் (வயது 12) ஆகியோர் இருந்துள்ளனர். அப்போது, பிப். 7 ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் இவர்களின் வீட்டிற்குள் புகுந்த 5 பேர் கும்பல், பயங்கர ஆயுதத்துடன் அனைவரையும் கொலை செய்து, வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளது. இந்த தகவல் அறிந்து வீட்டிற்கு வந்த காவல் துறையினர், குடும்பத்தினர் துள்ளத்துடிக்க படுகொலை செய்யப்பட்டு இருப்பதை உறுதி செய்தனர்.
ஆனால், நகைகள், பணம் ஆகியவை கொள்ளைபோயிருந்தாலும், வழக்கமான கொள்ளையர்கள் கைவரிசை குறித்த தடயங்கள் இல்லை. இதனால் முன்விரோதம் அல்லது வேறு பிரச்சனைக்காக கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகித்த காவல் துறையினர், கங்காராமின் உறவினரான மைசூரை சேர்ந்த லட்சுமி சுனில் என்ற பெண்மணியை பிப். 9 ஆம் தேதி கைது செய்தனர். அவரிடம் நடந்த விசாரணையில், கொலைக்கான பரபரப்பு தகவல் கிடைத்தது.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், "வியாபாரியான கங்காராமுடன் லட்சுமி சுனிலுக்கு (வயது 26) கள்ளக்காதல் பழக்கம் இருந்து வந்துள்ளது. கடந்த சில மாதமாக கங்காராம் கள்ளக்காதலியை சந்திக்காமல் இருந்து வந்த நிலையில், எனக்கு மனைவி மற்றும் குழந்தைகள் முக்கியம் என்று கூறி கள்ளக்காதலை கைவிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த லட்சுமி சுனில், தங்களது கள்ளக்காதலுக்கு கங்காராமின் மனைவி மற்றும் குழந்தைகள் இடையூறாக இருக்கிறார்கள் என எண்ணியுள்ளார்.
மேலும், அவர்களை குடும்பத்தோடு தீர்த்துக்கட்ட திட்டமிட்ட நிலையில், அதற்கான ஆயுதங்களையும் வாங்கியுள்ளார். கூலிப்படையும் தயார் செய்யப்பட்டு, சம்பவத்தன்று கங்காராமின் வீட்டிற்கு சென்ற லட்சுமி சுனில், அவரின் குடும்பத்தினரை படுகொலை செய்துள்ளார். பின்னர், அங்கிருந்து தப்பி சென்ற நிலையில், லட்சுமி சுனில் மட்டும் உறவினர் என்பதால், அப்பாவி போல நடித்து உறவினர்கள் முன்னர் கண்ணீர் வடித்து நாடகமாடி இருக்கிறார்" என்று தெரிவித்தனர்.
குடும்பத்தினரை கொலை செய்து நாடகமாடிய தகவல் கங்காராம் மற்றும் லட்சுமி சுனிலின் உறவினர்களுக்கு தெரியவரவே, ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற அவர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும், "அவளுக்கு ஈவு இரக்கம் காண்பிக்க கூடாது. உங்களின் நீதி கிடைக்க பல மாதம்/வருடம் ஆகும். எங்களிடம் ஒப்படையுங்கள். அவளை இப்போதே கொலை செய்கிறோம்" என்று கோஷமிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு சூழல் ஏற்பட்டது. காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் அங்கிருந்து அனுப்பி வைத்தனர். கூலிப்படையை சேர்ந்த 2 பேருக்கு வலைவீசப்பட்டுள்ளது.