#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வாங்கிய அரிவாளை திருப்பி கொடுக்காததால் தகராறு.. விவசாயி அடித்தே கொலை..!
விறகு வெட்ட வாங்கி சென்ற அரிவாளை மீண்டும் திரும்ப தராததால், விவசாயி மற்றொரு விவசாயியை அடித்து கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மண்டியா மாவட்டம், மலவள்ளி ஹலகூர் அருகே உள்ளது முத்தத்தி கிராமம். இந்த கிராமத்தை சார்ந்தவர் விவசாயி முத்துராஜ் (வயது 35). இவர் கடந்த டிச. 27 ஆம் தேதி உறவினரின் இறப்பை தொடர்ந்து, விறகு வெட்டிவேரை வனப்பகுதிக்கு சென்றுள்ளார். இதே கிராமத்தை சார்ந்த விவசாயி சஞ்சீவமூர்த்தி என்பவரின் அரிவாளை வாங்கி முத்துராஜ் காட்டுக்கு சென்றுள்ளார்.
விறகு வெட்டி வந்து முத்துராஜின் உறவினர் உடல் தகனம் செய்யப்பட்ட நிலையில், அவர் அரிவாளை வாங்கியவரிடம் கொடுக்காமல் இருந்துள்ளார். சஞ்சீவமூர்த்தி பலமுறை தனது அரிவாளை கேட்டும் கொடுக்காத காரணத்தால், இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முந்தினமும் அவர்களுக்குள் தகராறு ஏற்படவே, ஆத்திரமடைந்த சஞ்சீவமூர்த்தி முத்துராஜை சரமாரியாக அடித்து நொறுக்கியுள்ளார்.
இதனால் படுகாயமடைந்த முத்துராஜ் மயங்கி கீழே விழுந்த நிலையில், அவரை மீட்ட உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், முத்துராஜ் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக ஹலகூர் காவல் துறையினருக்கு தகவல் தெரியவரவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் முத்துராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர், இதுகுறித்து நடத்திய விசாரணையில் அரிவாளை திரும்ப கொடுக்காதததால் ஏற்பட்ட தகராறில் முத்துராஜை சஞ்சீவமூர்த்தி கொலை செய்தது அம்பலமானது. இதனையடுத்து, சஞ்சீவமூர்த்தியை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.